மேலும் மூவருக்கு கொரோனா, நேற்றுமட்டும் 12 பேருக்கு... மொத்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 12 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 523 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

இதேவேளை நேற்று மட்டும் 10 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதாகவும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: