பதின்ம வயது சிறுமி வன்புணர்வு - சகோதரன் உட்பட இளைஞர்கள் இருவர் கைது

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராயில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டது.

சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியை சுமார் 6 மாதங்களாக இந்த சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை சிறுமி கர்ப்பவதி என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை கிடைத்ததும் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments: