டெங்குவினால் ஆண்டுக்கு 500 முதல் 600 பேர் இறக்கும் போது கூட தேர்தல் நடைபெற்றது - அமைச்சர் பந்துல

ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் 50 முதல் 600 பேர் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை  பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் COVID-19 தொற்றுநோய் தாக்கம் காரணமாக நாட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளபோது பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஊடகவியலார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"அரசாங்கத்தின் காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் டெங்கு நோயால் இறந்து கொண்டிருந்தனர், ஆனால் தேர்தல்கள் நடத்தப்பட்டன. COVID-19 ஆல் ஏற்படும் இறப்புகள் டெங்குவுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை” என்றார்.

இருப்பினும் இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பதிரண பொதுத் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் அணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

"நாட்டை இயல்பு நிலைக்குத் கொண்டுவருவதே எங்கள் திட்டம். எங்கள் குறிக்கோள் தேர்தல்களை நடத்துவதல்ல. ஜனாதிபதி இருக்கிறார், அமைச்சரவை செயற்படுகிறது, எங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன, எனவே எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியை முடிவு செய்ய வேண்டும்" என கூறினார்.

No comments: