ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகின்றது

கோவிட் -19 நெருக்கடி தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்தமையினை அடுத்து குறித்த கலந்துரையாடலில் பேசப்போகும் விடயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்றக் குழு இன்று கலந்துரையாடவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான் அகில விராஜ் கரியவாசம், கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முந்தைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கை இதன்போது முன்வைக்கப்படும் என கூறினார்.

மேலும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் நடவடிக்கை மற்றும் பிற நிவாரணங்கள் வழங்கும் திட்டங்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுக்கள் குறித்தும் பிரதமருடன் விவாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்கு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: