மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைத் தவிந்த இடங்களில் நாளை (20) முதல் மாகாண பேருந்து சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் பஸ் ​போக்குவரத்து இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பேருந்துகளில் பயணிக்க முடியும் என அவர் கூறினார்.

இதனிடையே, இன்று முதல் அத்தியாவசிய சேவை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பிரிவில் சேவையாற்றுபவர்கள் பணம் செலுத்தி அனுமதிச்சீட்டுக்களை பெற்று ரயில்களில் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: