பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட முடிவு செய்தமையினால் மஹிந்த சமரசிங்க பதவி நீக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும் மஹிந்த சமரசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் களுத்துறைக்கான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவராக சுனித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: