கொரோனா தொற்று - முதலாவது கடற்படை உறுப்பினர் குணமடைந்தார்

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட முதலாவது கடற்படை உறுப்பினர் நேற்று (03) குணமடைந்து வீடு திரும்பினார் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த கடற்படை உறுப்பினர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவர் குணமடைந்து வெளியேறியுள்ளார் என்றும் அவர் இப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

No comments: