கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1895 ஆக உயர்ந்துள்ளது.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 55 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 1895 பேரில் 542 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

No comments: