கொழும்பில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (14) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த காலப்பகுதிக்குள் கொழும்பு 1-இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

No comments: