தனது பெயரை மாற்றி ஒழிந்துகொண்டார் அர்ஜுன மகேந்திரன்!

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை அர்ஜன் அலெக்ஸ்சான்டர் என மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) அறிவித்துள்ளனர்.

இதனை சட்ட மா அதிபர் விசேட நீதாய மேல் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (16) அறிவித்துள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

அர்ஜுன மகேந்திரன் கடந்த 2015 ஆம் ஆண்டில், தனது மருமகனுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை அனுப்பியதாக அவர்  மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பத்திர ஏலங்களின்போது குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களைத் தவிர்த்து விநியோகிக்கபட்டதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு சுமார் 1.6 பில்லியன் ரூபாய்க்கும் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து அன்றய தினத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன் குறித்த மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படுவதற்கு முதல்நாள் அதாவது 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: