சிங்கள மொழியை குப்பை என கூறவில்லை... சகல சவால்களையும் எதிர்கொள்ள தயார் - ரட்ணஜீவன் ஹூல்

சிங்கள மொழியை குப்பை என கூறவும் இல்லை என தெரிவித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தனக்கு சிங்கள மொழி தெரியாது என்றும் தான் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தமது நியாயப்பாடுகளை முன்வைத்தது பேசிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், "எனது தரப்பு காரணிகளை நாம் ஆணைக்குழுவில் கூறினேன். 

நான் எந்த அரசியல் கட்சியையும் விமர்சிக்கவில்லை. சிங்கள மொழியை குப்பை என கூறவும் இல்லை, எனக்கு சிங்கள மொழி தெரியாது.

சிங்களத்தில் குப்பை என எழுதினாலும் எனக்கு தெரியாது என்றே கூறினேன். ஆகவே இது குறித்து அவர்களிடம் எனது காரணிகளை முன்வைத்துவிட்டேன். அடுத்ததாக ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும்.

என்மீது குற்றம் இல்லாத நிலையில் நான் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நான் சகல சவால்களையும் எதிர்கொள்வேன் என கூறியுள்ளேன்.

எனக்கு ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என நம்புகிறேன். அடுத்த இரு தினங்களில் மீண்டும் ஆணைக்குழு கூடும் அப்போது எனது விடயங்களை ஆணைக்குழு ஆராயும்" என்றார்.

No comments: