முகக் கவசம் அணியாவிட்டால் இடமில்லை: அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள் நிலையில் அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொதுச் சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர், பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைசசர் மஹிந்த அமரவீர ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும் என்றும் தெரிவித்தார்.

பேருந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பேருந்துகளிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பேருந்துதனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, பாடசாலை பேருந்துக்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளை தற்காலிகமாக பயணிகள் போக்கு வரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் என்று அமைச்சர் மஹந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments