பிரித்தானியாவில் வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 15 முதல் பகுதியளவில் திறக்கப்படும்

பிரித்தானியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 15 முதல் தனிப்பட்ட பிரார்த்தனைக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் ரொபேர்ட் ஜென்ரிக் நேற்று அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமுலில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே வழிபாட்டுத் தலங்கங்களையும் பாதுகாப்பாக செயற்படுவதை உறுதிசெய்யும் அனைத்து மதத் தலைவர்களுக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: