கருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த கூற்றை கண்டிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கருணா அம்மானின் கருத்து நாட்டில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தால் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அரசியலைப் பொருட்படுத்தாமல் அவரின் இந்த கூற்று கண்டனத்திற்கு காரணமாக இருந்தது என குறிப்பிட்ட அவர், எமது போர்வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் வெற்றிகளை யாராவது குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அவர்களை கேலி செய்தால், அத்தகைய நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் நாட்டின் அமைதிக்கு அவரது கருத்து குந்தகத்தை ஏற்படுத்துமாக இருந்தால் அவர்மீது அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை என்றும் அவர் கூறினார்.

No comments: