அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தமானியில் 22 தேர்தல் மாவட்டங்களில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

இதற்கமைய இன்று (09) வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, இந்த வாரத்திற்குள் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: