ஹரீன் பெர்னாண்டோவின் கருத்திற்கு மன்னிப்பு கோரினார் சஜித்

ஹரின் பெர்னாண்டோவின் கருத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச தான் மன்னிப்பு கோருவதற்கோ அல்லது தவறை திருத்துவதற்கோ தயங்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஹரின் பெர்ணான்டோவின் உரை காயப்படுத்தியுள்ளது, அவமதித்துள்ளது என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச இதன் காரணமாக அந்த அறிக்கை குறித்து கவலை வெளியிடுவதுடன் மன்னிப்பை கோருவதாக தெரிவித்துள்ளார்.

தவறுகள் இடம்பெறும்போது மன்னிப்பு கோர நான் தயங்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ள அவர் ஹரின் பெர்ணான்டோவின் கூற்றிற்காக நான் பேராயரிடம் மன்னிப்பை கோருவேன் என தெரிவித்துள்ளார்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.

No comments: