கொரோனா வைரஸ் - மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1887 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 03 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று மேலும் 35 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 1,287 ஆக அதிகரித்துள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 589 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: