சீனாவில் உள்ள தூதரகம் மீண்டும் திறக்கப்படும் - அமெரிக்கா

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்ட சீனாவின் வுஹானில் உள்ள தனது துணைத் தூதரகதின் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என அமெரிக்க தூதரகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

வுஹானில் எதிர்காலத்தில் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்க சீனாவிற்கான அமெரிக்க தூதுவர் டெர்ரி பிரான்ஸ்டாட் விரும்புகிறார் என தூதரகத்தில் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பிராங்க் விட்டேக்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசாங்கம் நாட்டில் பொது முடக்கத்தை அறிவித்ததை அடுத்து ஜனவரி பிற்பகுதியில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தூதரக ஊழியர்களையும் குடும்பத்தையும் மீண்டும் நாட்டுக்கு அழைத்தது.

சுமார் 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மத்திய சீன நகரமான வுஹான், அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்றுக்கள் மற்றும் இறப்புகள் பதிவான நகரமாகும், இருப்பினும் கொரோனா தொற்று பின்னர் நாடாளாவிய ரீதியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த நகரில் உருவாகியதாக அறிவிக்கப்பட்ட குறித்த வைரஸ் தொற்று உலகில் பல நாடுகளுக்கும் பரவு 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளதுடன் 410,000 மேற்பட்டவர்களை காவுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: