இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேரின் விபரங்கள்

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்த மேலும் 10 பேர் நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 2 பேர் கடற்படையினர் எனவும் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் 2 பேர் இராணுவ வீரர்கள் எனவும் குறித்த 10 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரில் 4 பேர் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்றும் இருவர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர் என்றும் மற்றையவர் பெலரஸிலிருந்து வந்தவரென்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தமாக 1,643 கொரோனா தொற்று நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 811 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 821 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில் 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: