யாழுக்கு வந்துவிட்டது கொரோனா தடுப்பூசி!


யாழ். மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ். போதனா  வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி இன்று (29) இதனை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 5 இலட்சம் மருந்துகள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: