மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் இலங்கை!


ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் மிச்சேல் பச்லெட் எழுப்பிய விடயங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிப்பதாகவும் இந்த விடயங்கள் குறித்து தீர்க்கமான முடிவை வெளியிடுவோம் என்றும் வெளிவிவகார அமைச்சின் கவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமையால் அச்சமடைந்துள்ளதாக குறிப்பிட்டு கடந்த ஜனவரி 27ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுக்க மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வகுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தவும் மனித உரிமைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: