காதலருடன் முதல்முறையாக சென்னை வந்த ஸ்ருதி..!


உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களாக டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளின் போது தனது காதலருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில் தற்போது காதலருடன் முதல் முறையாக நேற்று சென்னைக்கு வந்த ஸ்ருதிஹாசன் இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இருவரும் ஒரு துணிக் கடையில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அம்ரிதாவும் இந்த புகைப்படத்தில் இணைந்துள்ளார். 

எனவே தனது காதலருடன் திருமணம் குறித்த அறிவிப்பை மிகவிரைவில் ஸ்ருதிஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதியுடன்  ‘லாபம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன், தெலுங்கில் ‘வக்கீல் சாஹேப்’ மற்றும் ‘சலார்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

No comments: