யாழில் வாள்வெட்டு - இளைஞர் ஒருவர் படுகாயம்


யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய த.நிரோஷன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.


குறித்த இளைஞன், வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவொன்று வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.


இந்நிலையில் தப்பிச் சென்றுள்ள சந்தேகபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: