ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கலாம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை


நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எனவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது நாளொன்றுக்கு அடையாளம் காணப்படும் நோயாளிகளில் குறிப்பிட்ட சதவீதமானோர் டெல்டா நோயாளிகளாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.


தற்போது நாட்டில் 68 டெல்டா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களை விட அதிகளவிலானவர்கள் சமூகத்தில் இருக்கலாம் என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


மேலும் டெல்டா மாறுபாடு அதிகரிக்காமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

No comments: