ஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தின் இறுதி ஆயுதம் - அமைச்சர் கெஹலிய


நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.


முழுமையாக ஊரடங்கை பிறப்பிக்க அரசாங்கத்திடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.


இருப்பினும் மிகவும் அத்தியாவசிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.


எந்தவிதமான முடக்க கட்டுபாடுகளையும் அமுல்படுத்தாமல் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.


பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என நிபுணர்கள் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ஆகவே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: