உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சை எழுதுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


2021 க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது 


அதன்படி பரீட்சைக்கு தோற்றுவார்கள் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பம் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகள் கொரோனா தொற்று காரணமாக பல முறை பிற்போடப்பட்டுள்ளன.


எனினும், கல்வி அமைச்சு கடந்த மாதம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14, அன்று நடைபெறும் என்று அறிவித்தது.


இதற்கிடையில், உயர்தர பரீட்சை நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: