10 வயது சிறுவனை பலியெடுத்த கொரோனா...!


மட்டக்களப்பு - வுவுணதீவில் கொரோனா தொற்றினால் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


மாவட்ட சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும் ஆரையம்பதியில் ஒருவரும் வவுணதீவில் 10 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இதனையடுத்து, மட்டக்களப்பில்  கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது என வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

No comments: