இலங்கையில் கொரோனாவால் மேலும் 215  உயிரிழப்புகள் பதிவு, 3,828 பேருக்கு தொற்று


இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


இவர்களில் 30 வயதுக்கு குறைவான இருவர் (ஆன்,பெண்) உட்பட 115 ஆண்களும் 100 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 44 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.


அவர்களில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 216 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 58 ஆயிரத்து 514 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

No comments: