அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் - அமைச்சர் நாமல்


அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக யாழிற்கு இன்று (09) விஜயம் செய்துள்ள அவர், அதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என கூறினார்.


குறிப்பாக பல மில்லியன் ரூபாய் மத்திய அரசின் நிதியில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது என்றும் அதேபோல பல்வேறுபட்ட குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்களும் வதக்கி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


கொரோனா தொற்று என்ற தடையையும் தாண்டி அதனை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தோடு இந்த அபிவிருத்தி பணிகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments: