அச்சுறுத்தலின் பின்னர் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் - செல்வராசா கஜேந்திரன்


அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற லொஹான் ரக்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது.


குறித்த சம்பவத்தை அடுத்து தங்களுடைய உறவுகளின் பாதுகாப்பு குறித்து அச்சமைடைந்துள்ள அரசியல் கைதிகளின் உறவுகள், அவர்களை நேரில் சென்று பார்வையிடுமாறு தேசிய மக்கள் முன்னணியினரிடம் கோரிக்கை விடுத்தனர்.


அதன்படி நேற்று தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பினை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


அத்தோடு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அதுவரை சொந்த பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

No comments: