இலங்கை குறித்த ஆணையாளரின் கடும் அதிருப்தி : அமர்வில் உரையாற்றுகின்றார் ஜி.எல்.பீரிஸ்


ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமானது.


முதல் நாளிலேயே இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்தது ஆணையாளர் மிச்சல் பச்லெட்டினால் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


இதன்போது அவசரகாலச்சட்டம், இராணுவ மயமாக்கப்படல், நல்லிணக்கம், பொறுப்புக்கூரல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான முன்னேற்றங்கள் குறித்து ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இன்று இணைய வழியூடாக கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

No comments: