நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதால் மீம் போட்டேன்..!!

நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதால் மீம் போட்டதாக  குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறியுள்ளார். 
இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீ கணேஷ். இவர் 8 தோட்டாக்கள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அறிந்ததே . இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வாவை வைத்து  ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

இயக்குனர் ஸ்ரீ கணேஷுக்கு மீம்ஸ் போடுவதிலும் ஆர்வம் அதிகம் உள்ளது . இதனால் தனக்காக ஒரு மீம் போட்டு தரும்படி நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதாகவும், இதற்காக ஒரு மீம்மை தயார் செய்து, இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


பிரியா பவானி சங்கர் நடித்த மாஃபியா திரைப்படம் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடும் நிலையல், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஸ்ரீ கணேஷ்  அந்த மீம்மை உருவாக்கி பகிர்ந்து உள்ளார் .

No comments: