இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டத்தால் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது வங்காளதேசம்...!!!

ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது ,2-வது இன்னிங்சில் ஜிம்பாப்வே 189 ரன்னில் சுருண்டது, நயீம் ஹசன் ஐந்து விக்கெட்டுகள் வீழ்தினார்.

டாக்காவில் வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கடந்த 22-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் ஆட தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் எர்வின் (107) சதமும், தொடக்க வீரர் மஸ்வாயுர் (64) அரைசதமும் அடிக்க ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜாயத், நயீம் ஹசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் மொமினுல் ஹக் (132) சதமும், அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் (203 அவுட் இல்லை) இரட்டை சதமும் விளாச வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 189 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணியில் எர்வின் 43 ரன்களும், மருமா 41 ரன்களும், ஷிகந்தர் ரசா 37 ரன்களும் சேர்த்தனர். வங்காளதேசம் அணி சார்பில் நயீம் ஹசன் ஐந்து விக்கெட்களையும் மதைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் தனதாக்கினார்.

No comments: