ராஜகிரிய சேற்றுநிலப் பகுதியில் தீ பரவல்

ராஜகிரிய மற்றும் புத்கமுவ வீதியில் பெரேரா மாவத்தைக்கு அருகிலுள்ள சேற்றுநிலப் பகுதியில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

சேற்று நிலம் என்பதால், தீ பரவியுள்ள பகுதிக்கு செல்ல சிரமமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல்-212 ரக உலங்கு வானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: