சஜித் தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு - ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments: