ஐ.நா தீர்மானங்களில் இருந்து விலகும் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து உடனடியாக விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அத்தோடு இராணுவத் தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டுத் தண்டனை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: