இடைக்கால தடை உத்தரவைக் கோரி கிஹான் பிலபிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய, தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவைக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஏ.எச்.எம்.நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின்போது, குறித்த கோரிக்கையை நிராகரிக்குமாறு ஆட்சேபனை எழுப்புவதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி மன்றாடியார் நாயகம் மிலிந்த குணதிலக குறிப்பிட்டார்.

மேலும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொய்யானது என சுட்டிக்காட்டியுள்ள பிரதி மன்றாடியார் நாயகம் சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கைது செய்யுமாறு உத்தரவொன்றை பெற்றுக் கொடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

அத்தோடு குறித்த கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த கிஹான் பிலபிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மனுதாரரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடங்களில் வாயிலாக வௌியிடப்பட்டிருந்தாக தெரிவித்தார்.

இதன் பின்னர் குறித்த மனுவை இன்று மதியம் மீண்டும் பரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

No comments: