தனது முடிவை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யுமென நம்புகின்றோம்
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையுத்தரவானது கவலையளிக்கும் செயலென அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு இச்செயற்பாடு இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானது என தெரிவித்த அவர் அமெரிக்காவானது தனது முடிவை மதிப்பாய்வு செய்யுமென இலங்கை அரசாங்கம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
