லண்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து : சந்தேக நபர் கைது!

லண்டனில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு , குறித்த சம்பவத்தினை பொலிஸார் பயங்கரவாத செயலாக இருக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் ஆனாலும் 70 வயதுடைய நபர் ஒருவர் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: