உலக கோப்பை ஐந்தாவது லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா..

பெர்த்தில் நடைபெற்ற பெண்களுக்காக ஐந்தாவது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக 122 ரன்னை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


ஆஸ்திரேலியா பெர்த்தில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதியது. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு வீராங்கனை சமாரி அட்டப்பட்டு ஜெயங்கனி சிறப்பாக விளையாடி 38 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் ஆட்டமிழக்கும்போது இலங்கை 14 ஓவரில் 91 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின் ஆஸி பெண்களிடம் தாக்கு பிடிக்க முடியாது 36 பந்தில் 31 ரன்களே சேர்க்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்தது.

பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. முதல் மூன்று வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 10 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது ஆஸி அணி.

பின்னர் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் லானிங் உடன் ஜோடி சேர்ந்த ஹெய்னஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹெய்னஸ் 47 பந்தில் 60 ரன்கள் விளாசினார். 
லானிங் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

No comments: