பிரபல தமிழ் நடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்..!

பிரபல தமிழ் நடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டு வரும் முயற்சியில் குடும்பத்தினர். அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..!


பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் தனது 23 ஆவது  வயதில் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இச்சம்பவம்  திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் பிரபு நடிகை கனகா நடிப்பில் வெளியான "தாலாட்டு கேக்குதம்மா" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கினார்.

இதன்பின் சுந்தர்.சி எடுத்த பல படங்களில் இவர் நடித்திருந்தார். ஏன் அவர் தயாரித்த நந்தினி சீரியலை கூட இவர் தான் இயக்கி வந்தார், தற்போது ரன் தொடரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஷாரூக் கபூர் என ஒரே ஒரு மகனும், ஷாமீமா மற்றும் சானியா என இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் ஷாருக் கபூர் தான் முதலில் பிறந்தவர் .

இவர் இன்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனது அம்மாவுடன் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றுள்ளார். அங்கு இருந்த போது தட்ப வெப்ப நிலை காரணமாக ஷாரூக் கபூர் அங்கு கடுமையான சளி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு பின்னர் அங்கேயே உயிரிழந்திருக்கிறார்.

23 வயதே ஆன ஷாரூக் கபூர் திடீரென மரணமடைந்த தகவல் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தகவலை கேட்டு ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. அவரது உடலை சென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் நடிகர் ராஜ் கபூர் ஈடுபட்டுள்ளார். இதனிடையே மெக்காவில் இருந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

No comments: