கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பரவல்!

யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பானியா சுகாதார தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

டயமண்ட்  பிரின்சஸ் கப்பலில் ஒரே நாளில் அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிமை கண்டறியப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இதன் மூலம் குறித்த கப்பலில் பயணித்தவர்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது தற்போது 456 ஆக உயர்வடைந்துள்ளதுடன், ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 513 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை கப்பலிலிருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட தமது நாட்டுப் பிரஜைகளை அமெரிக்கா வெளியேற்றியிருந்ததைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: