இராணுவத்தினர் பிச்சைக்காரர்கள் அல்லர் - கமல் குணரத்தன்

இராணுவத்தினர் பிச்சைக்காரர்கள் இல்லை என என்றும் அவர்களின் கோரிக்கைகளைப் பாதுகாக்க அவர்கள் நடைபாதையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை தீர்க்க புதிய அமைச்சரவை பாத்திரத்தை சமர்ப்பிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே தற்போதுள்ள ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு முறைகளில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

No comments: