நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தொடங்கிய ஈரானியர்கள்

ஈரானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

290 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 58 மில்லியன் ஈரானியர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அந்நாட்டு நேரப்படி 10 மணி நேரம் வாக்களிப்பு தொடங்கியது என்றும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: