அன்னம் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்னம் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று கூடிய செயற்குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைமையகமாக சிறிகொத்தவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது.

இதன்போது, “சமகி ஜன பலவேகய” கூட்டணியில் அன்னம் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவும், புதிய கூட்டணியின் தலைவராகவும் நியமிக்க முடிவு எட்டப்பட்டது.

எவ்வாறாயினும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில் போட்டியிட புதிய கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பாக ஐ.தே.க. உறுப்பினர்களிடையே மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

இதனை அடுத்து இடம்பெற்ற பல கூட்டத்தின் பின்னர் ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் அன்ன சின்னத்தில் போட்டியிடுவதென இறுதி முடிவு   எட்டப்பட்டுள்ளது.

No comments: