எயார் பஸ் கொள்வனவு விவகாரம் - ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

எயார் பஸ் கொள்வனவு தொடர்பாக விளக்கமளிக்க ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

அத்தோடு நாளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச வழங்கள் சம்பந்தமான நிதி விதிமுறைகள் குறித்த நாடாளுமன்ற விவாதமும் நாளை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: