Tuesday, March 31, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார்.

இன்று மட்டும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் அறிவிப்பினை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை 4 வெளிநாட்டினர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 173 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.