Tuesday, March 31, 2020

இன்றுமட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது...!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதற்கமைய இன்று (31) தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 129 இல் இருந்து 132 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (30) மொத்தமாக 05 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான  சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.