தனிமைப்படுத்தலுக்காக கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்ட 174 வெளிநாட்டவர்கள்

வௌிநாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள், இன்று (21) காலை 5 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டுள்ள நிலையில் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இலங்கையர்கள் எனவும், நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அவர்களை 15 நாட்கள் குறித்த பகுதியில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் பொறுப்பாக கடமையாற்றுவதாக தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலை நிர்வாகம் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டால் அவர்கள் உடனடியாக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுப்பபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments