புதிய அரசியலமைப்பு,தேர்தல் முறைமை : வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு


மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.


மேலும் ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் இல்லாமல் சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.


நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்றும் படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

No comments: